Posts

கஜேந்திர மோக்ஷம்

கஜேந்திர மோக்ஷம் : குறையொன்றுமில்லை.. முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார். ஜலத்திலே இருக்கிற பரமாத்மா பிரணவ ஸ்வரூபியானவன். ஓம்காரமாக இருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கே நான் உரியவன் என்று (நம:) நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். 'நம' வென்னலாம் கடமை' - திருவேங்கடத்திலே இருக்கிறானே அவனெதிரில் போய் 'நம' என்று சொல் என்கிறார் ஆழ்வார்! நம: என்று நாம் சொல்லும் போது 'நான் எனக்கே உரியவன்' என்கிற நிலையை அது அகற்றுகிறது. நாமே நமக்கு ரக்ஷகர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமல்லவா..? நமக்கு நம்மை ரக்ஷித்துக் கொள்ளும் சக்தியுள்ளதாக நினைத்துக் கொள்கிறோமே - இந்த அறிவைப் போக்குகிறது நம: யானையை முதலை பிடித்து தண்ணீருக்குள் இழுக்கிறது. யானையோ கரைப்பக்கம் இழுக்கிறது. இப்படி இரண்டும் சண்டை போடுகிற காட்சியை சுக பிரும்ம மஹரிஷி விவரிக்கிறார். பரீக்ஷித் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்!  விஷ்ணு தர்மத்திலே வருகிற ஸ்லோகம் அது.. விஷ்ணு தர்மம் என்று ஒரு கிரந்தம் - விஷ்ணு புராணம் மாதிரி. பரீக்ஷித்துக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. 'சுவாமி..! இப்படியே எத்தனை நாள் தான் ஒன்றை ஒன்று இழுத்தது..?

உன் பலவீனத்தில் என் பலம்

உன் பலவீனத்தில் என் பலம் : பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார். அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது. கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா? அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார். வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை. அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப

வெற்றி - தோல்வி

வெற்றி - தோல்வி : 'வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?' என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? 'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம். யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள். அதே நேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தாமோதரன் எனும் திருநாமம் உண்டு. தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத்தான் நாம் அறிவோமே! இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புக் கயிற்றுக்குக் கட்டுண்டு கிடந்தான்.   கயிற

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம் : ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே பரீக்ஷித் மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான்.  அதிலே ஒரு கேள்வி: 'சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - பாபத்தைப் போக்குவதற்காக. பிராயச்சித்தம் எதற்காகச் செய்வது?  யானையைக் குளிப்பாட்டி விட்டால் அது மீண்டும் மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறதே! அந்த மாதிாிதானே மனிதன் பிராயச்சித்தம் செய்தாலும் திரும்பவும் பாபத்தைப் பண்ணுகிறான். அப்படியானால் பிராயச்சித்தத்தினால் பிரயோஜனமில்லையே. அது வீண்தானே? அடியேன் மனத்தில் இவ்வாறு தோன்றுகிறது. அதைத் தெளிவிக்க வேண்டும் என்று சுகபிரம்மத்தைப் பார்த்து பரீக்ஷத் கேட்டதும் அவா் ரொம்ப சந்தோஷப்பட்டார். இந்த மாதிாி நுணுக்கமாகக் கேள்விகள் கேட்பாரைக் கண்டால் மகான்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.  சிஷ்யனானவன் பிரச்னமதியாக இருக்க வேண்டும் - அதாவது கேள்விகள் கேட்கும் புத்தி உடையவனாக இருக்க வேண்டும். அந்தக் கேள்விகள் பரீட்சார்த்தமாக இருக்கக்கூடாது. சாஸ்திர ரீதியாக இருக்க வேண்டும். பிரச்னோபநிஷத் என்ற உபநிஷத்தானது கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்பதைச் சொல்

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன் : வாழ்க வளமுடன் - என்பது எதைக்குறிக்கிறது...? வாழ்க என்பது வாழ்த்துச்சொல். வளமுடன் என்பது ஒரு நிறைவுத்தன்மையை குறிக்கும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத்தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம். ஒருவன் எப்போது நிறைவுத்தன்மை அடையமுடியும்? தேவைகள் பூர்த்தியடையும்போது நிறைவுத்தன்மை ஏற்படும். தேவைகளை எப்படி பட்டியலிடுவது...? மனிதனின் பொதுவான தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம். ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம். 1) உடல் நலம்  2) நீளாயுள்  3) நிறைசெல்வம்  4) உயர்புகழ்  5) மெய்ஞானம் இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை. உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும். "வாழ்க வளமுடன்" என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும்போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்றுவாழுங்கள் என்று வாழ்த்துகிறார். இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன்பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது. அது என்ன....? "வாழ்க வளமுடன்" என்று இ

சிந்தனைக்கு நேரங்கள்

சிந்தனைக்கு நேரங்கள் : புத்தகங்களுடன் செலவழிக்கும் நேரங்கள்  நம்மை வெளிச்சத்திற்கு இட்டுச்செல்லும்  நண்பர்களுடன் செலவழிக்கும் நேரங்கள் . கவலைகளை நம்மிடமிருந்து விரட்டி விடும். மனைவி / கணவனோடு செலவழிக்கும் நேரங்கள் . வாழ்க்கையை வசந்தமாக மாற்றும். குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள்  நம்மையும் மழலையாக்கி மீண்டும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். பெற்றோருடன் செலவழிக்கும் நேரங்கள்  தெய்வத்துடன் நம்மை சங்கமிக்க வைக்கும். ஆலயத்தில் செலவழிக்கும் நேரங்கள்  மனத்தின் அழுக்குகளைப் போக்கி புனிதனாக்கும். விளையாட்டில் செலவழிக்கும் நேரங்கள்  மனதையும், தேகத்தையும் ஒருசேர வலிமையாக்கும். போதையுடன் செலவழிக்கும் நேரங்கள்  ஓசையின்றி நம்மை நரகத்திற்க்கு இட்டுச்செல்லும். கற்பித்தலில் செலவழித்த நேரங்கள்  வருங்காலத் தலைவர்களை உருவாக்க வைக்கும். உழைப்புடன் செலவழிக்கும் நேரங்கள்  வியர்வைக்கு பரிசாக வெற்றியைத் தந்து உயர்த்திட வைக்கும். சோம்பலுடன் செலவழிக்கும் நேரங்கள்  நம்மை வாழ்வின் இருளில் தள்ளிவிடும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நேரங்கள். அவரவர் வாழ்வும் அவரவர் நேரங்களை செலவழிக்கும் விதங்களில் மாற்றம் உண்

அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே

அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே : ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார். உடனே பணக்காரர் ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார் சிற்பி சிரித்துக்கொண்டே “இல்லை ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார் பணக்காரர் ஆச்சரியத்துடன் ”என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே” எனக் கேட்டார். “அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி. “ஆமாம் ….அது சரி.. இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர். “இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி. பணக்காரர் வியப்புடன் ”நாற்பது அடி உயரத்தில் இந்த