Posts

Showing posts from 2020

கஜேந்திர மோக்ஷம்

கஜேந்திர மோக்ஷம் : குறையொன்றுமில்லை.. முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார். ஜலத்திலே இருக்கிற பரமாத்மா பிரணவ ஸ்வரூபியானவன். ஓம்காரமாக இருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கே நான் உரியவன் என்று (நம:) நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். 'நம' வென்னலாம் கடமை' - திருவேங்கடத்திலே இருக்கிறானே அவனெதிரில் போய் 'நம' என்று சொல் என்கிறார் ஆழ்வார்! நம: என்று நாம் சொல்லும் போது 'நான் எனக்கே உரியவன்' என்கிற நிலையை அது அகற்றுகிறது. நாமே நமக்கு ரக்ஷகர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமல்லவா..? நமக்கு நம்மை ரக்ஷித்துக் கொள்ளும் சக்தியுள்ளதாக நினைத்துக் கொள்கிறோமே - இந்த அறிவைப் போக்குகிறது நம: யானையை முதலை பிடித்து தண்ணீருக்குள் இழுக்கிறது. யானையோ கரைப்பக்கம் இழுக்கிறது. இப்படி இரண்டும் சண்டை போடுகிற காட்சியை சுக பிரும்ம மஹரிஷி விவரிக்கிறார். பரீக்ஷித் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்!  விஷ்ணு தர்மத்திலே வருகிற ஸ்லோகம் அது.. விஷ்ணு தர்மம் என்று ஒரு கிரந்தம் - விஷ்ணு புராணம் மாதிரி. பரீக்ஷித்துக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. 'சுவாமி..! இப்படியே எத்தனை நாள் தான் ஒன்றை ஒன்று இழுத்தது..? ...

உன் பலவீனத்தில் என் பலம்

உன் பலவீனத்தில் என் பலம் : பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார். அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது. கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா? அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார். வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை. அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப...

வெற்றி - தோல்வி

வெற்றி - தோல்வி : 'வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?' என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? 'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம். யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள். அதே நேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தாமோதரன் எனும் திருநாமம் உண்டு. தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத்தான் நாம் அறிவோமே! இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புக் கயிற்றுக்குக் கட்டுண்டு கிடந்தான்.   கயிற...

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம் : ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே பரீக்ஷித் மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான்.  அதிலே ஒரு கேள்வி: 'சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - பாபத்தைப் போக்குவதற்காக. பிராயச்சித்தம் எதற்காகச் செய்வது?  யானையைக் குளிப்பாட்டி விட்டால் அது மீண்டும் மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறதே! அந்த மாதிாிதானே மனிதன் பிராயச்சித்தம் செய்தாலும் திரும்பவும் பாபத்தைப் பண்ணுகிறான். அப்படியானால் பிராயச்சித்தத்தினால் பிரயோஜனமில்லையே. அது வீண்தானே? அடியேன் மனத்தில் இவ்வாறு தோன்றுகிறது. அதைத் தெளிவிக்க வேண்டும் என்று சுகபிரம்மத்தைப் பார்த்து பரீக்ஷத் கேட்டதும் அவா் ரொம்ப சந்தோஷப்பட்டார். இந்த மாதிாி நுணுக்கமாகக் கேள்விகள் கேட்பாரைக் கண்டால் மகான்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.  சிஷ்யனானவன் பிரச்னமதியாக இருக்க வேண்டும் - அதாவது கேள்விகள் கேட்கும் புத்தி உடையவனாக இருக்க வேண்டும். அந்தக் கேள்விகள் பரீட்சார்த்தமாக இருக்கக்கூடாது. சாஸ்திர ரீதியாக இருக்க வேண்டும். பிரச்னோபநிஷத் என்ற உபநிஷத்தானது கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்...

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன் : வாழ்க வளமுடன் - என்பது எதைக்குறிக்கிறது...? வாழ்க என்பது வாழ்த்துச்சொல். வளமுடன் என்பது ஒரு நிறைவுத்தன்மையை குறிக்கும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத்தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம். ஒருவன் எப்போது நிறைவுத்தன்மை அடையமுடியும்? தேவைகள் பூர்த்தியடையும்போது நிறைவுத்தன்மை ஏற்படும். தேவைகளை எப்படி பட்டியலிடுவது...? மனிதனின் பொதுவான தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம். ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம். 1) உடல் நலம்  2) நீளாயுள்  3) நிறைசெல்வம்  4) உயர்புகழ்  5) மெய்ஞானம் இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை. உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும். "வாழ்க வளமுடன்" என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும்போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்றுவாழுங்கள் என்று வாழ்த்துகிறார். இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன்பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது. அது என்ன....? "வாழ்க வளமுடன்" என்று இ...

சிந்தனைக்கு நேரங்கள்

சிந்தனைக்கு நேரங்கள் : புத்தகங்களுடன் செலவழிக்கும் நேரங்கள்  நம்மை வெளிச்சத்திற்கு இட்டுச்செல்லும்  நண்பர்களுடன் செலவழிக்கும் நேரங்கள் . கவலைகளை நம்மிடமிருந்து விரட்டி விடும். மனைவி / கணவனோடு செலவழிக்கும் நேரங்கள் . வாழ்க்கையை வசந்தமாக மாற்றும். குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள்  நம்மையும் மழலையாக்கி மீண்டும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். பெற்றோருடன் செலவழிக்கும் நேரங்கள்  தெய்வத்துடன் நம்மை சங்கமிக்க வைக்கும். ஆலயத்தில் செலவழிக்கும் நேரங்கள்  மனத்தின் அழுக்குகளைப் போக்கி புனிதனாக்கும். விளையாட்டில் செலவழிக்கும் நேரங்கள்  மனதையும், தேகத்தையும் ஒருசேர வலிமையாக்கும். போதையுடன் செலவழிக்கும் நேரங்கள்  ஓசையின்றி நம்மை நரகத்திற்க்கு இட்டுச்செல்லும். கற்பித்தலில் செலவழித்த நேரங்கள்  வருங்காலத் தலைவர்களை உருவாக்க வைக்கும். உழைப்புடன் செலவழிக்கும் நேரங்கள்  வியர்வைக்கு பரிசாக வெற்றியைத் தந்து உயர்த்திட வைக்கும். சோம்பலுடன் செலவழிக்கும் நேரங்கள்  நம்மை வாழ்வின் இருளில் தள்ளிவிடும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நேரங்கள். அவரவர் வாழ்வும் அவ...

அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே

அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே : ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார். உடனே பணக்காரர் ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார் சிற்பி சிரித்துக்கொண்டே “இல்லை ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார் பணக்காரர் ஆச்சரியத்துடன் ”என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே” எனக் கேட்டார். “அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி. “ஆமாம் ….அது சரி.. இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர். “இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி. பணக்காரர் வியப்புடன் ”நாற்பது அடி உயரத்தில் இந்த ...

உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா..?

உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா..? “நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி  செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்” என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன். “ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான். சாமி யோசித்தார். “சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. “நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு  உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார். “ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு  மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க  வேண்டும்”. “சரி… அப்புறம்?” “நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”.. “ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் எழுந்து போனான். அன்...

ராமானுஜரை தோற்கடித்தவர்

ராமானுஜரை தோற்கடித்தவர் : வடுக நம்பியின் குரு பக்தி : வடுக நம்பியோடு ராமானுஜர் அரங்கனை சேவிக்கச் செல்லுகிறார். இப்போது ஒருமுறை அரங்கனைப் பார்த்துவிட்டு சில மணி நேரம் கழித்து இன்னொரு முறை அரங்கனைப் பார்த்தால் கூட அப்போது வேறு ஒரு பாசுரம் சொல்லித்தான் அரங்கனை அனுபவிப்பார் ராமானுஜர். அந்த அளவுக்கு அரங்கனையும், ஆழ்வார்களின் பாசுரங்களையும் இரண்டறக் கலந்து தனக்குள் இணைத்துக் கொண்டிருப்பவர் அவர். அந்த வகையில்தான் அமலனாதிபிரான் தொகுப்பிலிருந்து, 'நீண்ட அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமே செய்தனவே' என்று குறிப்பிடுகிறார் ராமானுஜர். ஆக ராமானுஜரைப் போன்ற மிகப்பெரிய மேதைகளையே பேதைமை எனப்படுகிற மயக்கத்தில் தள்ளுகிற ஒரு விதமான வேதியியல் விசித்திரத்தை நடத்துகிறது அரங்கனின் அந்த நீண்ட அப்பெரிய கண்கள். இதைச் சொன்னதற்கு வடுக நம்பிகள் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கவே, 'என்ன வடுக நம்பி, அரங்கனின் கண்கள் உம்மை பேதைமை செய்யவில்லையா?' என்று கேட்கிறார். அதற்கு வடுக நம்பிகள், 'இல்லை சுவாமி... எம்மை ஒன்றும் செய்யவில்லை' என்று சொன்ன வடுகநம்பிகள், 'நான் அரங்கனைப் பார்த்தால்தானே அவனது...

புதிய பார்வை

புதிய பார்வை : சில காயங்கள் மருந்தால் சரியாகும்.  சில காயங்கள் மறந்தால்  சரியாகும். மனிதனுக்கு  பிரச்சனை.  அதனால், கடவுளுக்கு  அர்ச்சனை. வறுமை  வந்தால் வாடக்கூடாது.  வசதி வந்தால் ஆடக்கூடாது. கருப்பு  மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.  சிவப்பு  மனிதனின் நிழலும் கருப்புதான். வியர்வை துளிகள் உப்பாக  இருக்கலாம்.  ஆனால், அவை வாழ்க்கையை  இனிப்பாக  மாற்றும். வீரன்  சாவது இல்லை.  கோழை  வாழ்வதே இல்லை. உன்னை நீ செதுக்கி கொண்டே இரு. வெற்றி  பெற்றால் சிலை. தோல்வி அடைந்தால் சிற்பி. மனிதனுக்கு ABCD தெரியும். ஆனா "Q" ல போக தெரியாது. எறும்புகளுக்கு ABCD தெரியாது. ஆனா "Q" ல போக தெரியும். உண்மை எப்போதும்  சுருக்கமாக  பேசப்படுகிறது.  பொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது. பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம்  பொய். அவர்கள் பேச்சில், நாம் ஏமாந்து விடுகிறோம், என்பதே  உண்மை.  குறைகளை  தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான்.  குறைகளை  பிறரிடம்  தேடுபவன் களங்கப்படுகிறான்...

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்

 வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் : வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். 1) உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழி வாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்து விடக்கூடாது. 2) யாரையும் இளக்காரமாகப் பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும். 3) நமக்கு பிடிக்காதவராகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்துச் சொல்லி விட்டு செல்லுங்கள். 4) மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுங்கள். 5) 'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, ‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள். 6) மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக் கட்டுங்கள். அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். 7) நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அது தான். 8) சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றைச் சிறப்பாகச் செய்து முடியுங்கள். பெரிய வ...

கல் கருடன் உருவான கதை

கல் கருடன் உருவான கதை : செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழனின் அந்த சாம்பல் நிறப்பட்டத்துப் புரவி, அரசலாற்றங்கரையில் வந்து நின்றபோது மாலைப்பொழுது முற்றத் தொடங்கியிருந்தது. கரையோரத்து மரங்களிலிருந்து கூடு திரும்பிய பறவைகள் எழுப்பிய கூச்சல் எந்த இசைக் கருவியும் எழுப்ப முடியாத இன்னிசையை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த இரைச்சலை ரசித்தபடியே புரவியை விட்டு இறங்கினான் மன்னன் செங்கட்சோழன். நெடுநெடு வென்ற உயரத்துடனும் ஆஜானு பாகுவான தேகத்துடனும், புரவியிலிருந்து இறங்கியவனின் பெயருக்கேற்றபடி சிவந்து கிடந்த விழிகளில் அரசலாற்றங்கரையிலிருந்து வடக்கே பிரிந்த பாதையில் சற்றுத் தொலைவில் இரண்டொரு பந்தங்களும் பத்துப் பதினைந்து குடில்களும் புலப் பட்டன. புரவியைப் பிடித்தபடி மெல்ல நடந்தவன், குடில்களை நெருங்க நெருங்க, பாதை நன்றாகச் செப்பனிடப்பட்டிருப்பதையும், இரு புறங்களிலும் மலர்ச்செடிகளும் கொடிகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான். அதுமட்டுமின்றி, பாதையின் இரு புறங்களிலும் கல் இருக்கைகள், உடை...

தயக்கத்தைப் போக்கும் வழிகள்

தயக்கத்தைப் போக்கும் வழிகள் : 1. எந்தெந்த சூழ்நிலைகளில் தயக்க எண்ணங்கள் உண்டாகிறது என்பதை ஆராய வேண்டும். மீண்டும் அதே சூழ்நிலை வரும் போது எப்படி தயக்கமின்றி செயல்படுவது என் பதைத்திட்டமிட்டு ஒத்திகை செய்து கொள்ள வேண்டும். 2. தயக்கம் உண்டாக்கும் சூழ்நிலைகள் தவிர்க்காமல் அதை அடிக்கடி அணுகினால் தயக்கம் குறையும். உதாரணத்திற்கு, உயர் அதிகாரி ஒருவரை பார்க்கப்போவதில் தயக்கம் இருந்தால், அவரை பார்க்க வாய்ப்புகிட்டும் போதெல்லாம் சந்தித்து விடவேண்டும். பயத்தினால் பார்ப்பதை தவிர்க்கக்கூடாது. 3. புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளில் நாமாக சென்று ஒரிரு – நிமிடங்கள் உரையாடுதல் தயக்கத்தை குறைக்கும். 4. பிறருடன் உரையாடும்போது, புன்னகைத்தல், கைகுலுக்குதல், கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுதல், தலையசைத்து ஆமோதிப்பு காட்டுதல் போன்ற பழக்கங்களை வளர்க்க வேண்டும். 5. பிறர் பேசும்போது ஆவலுடன் கவனிப்பதே தயக்கத்தை போக்கும் சிறந்த வழியாகும். 6. வேலை செய்யுமிடத்தில், கூட்டமைப்புகளில் மற்றும் சமுதாய சங்க அமைப்புகளில் சேர்ந்து பங்கேற்றால் தயக்கம் குறையும். 7. மற்றவர்களிடம் உரையாடுதலுக்கு பொருளே இல்லாவிட்டாலும் த...

கால நேரம் என்பது

கால நேரம் என்பது : "காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழ மொழிகள் நாம் அறிந்ததே.  வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தை பாருங்கள். அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றிபெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள். காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனையாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.  "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க். உங்கள் நேரம் உங்களுக்காகவே. அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள். ...

நம்பிக்கை தான்

நம்பிக்கை தான் : நம் எல்லோருடைய வாழ்க்கையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டு இருக்கிறது. நம்பிக்கை சிறிதேனும் இல்லாத நிலை ஒருவருக்கு வந்து விட்டால் அவர் சாகத் துணிந்து விடுவர் என்பது நிச்சயம்.  நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை.. நாளை நம் கவலைகள் யாவும் தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில் தான் பலரும் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்து விட்டார். அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டார்.  அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில் தான் இறந்தார், மறுபடியும் கடலுக்குள் போகிறாயே? என்று கேட்டார் அவர்.  அதனால் என்ன, எனது தாத்தா கூட கடலில் மீன் பிடித்த போது தான் இறந்தார், அதன் பின்னும் எனது தந்தை மீன் பிடிக்கச் செல்லவில்லையா?  சரி, உங்கள் தாத்தா எப்படி இறந்தார்? எனக் கேட்டார்...

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம் : இயற்கை எப்போதுமே உடைந்த பொருட்களை அர்த்தம் உள்ளதாக மாற்றுகிறது. * உடைந்த மேகங்கள் தான் மழை பொழியும். * உடைந்த நிலம்தான் உழும் வயலாகும். * உடைந்த விதைகள் தான் புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும். அதனால் நீங்கள் ஒடிந்து நொறுங்கினால் நம்புங்கள் நல்லதே நடக்கும் என்று. கடந்த காலத்தை ஆராய்ந்து அனுபவம் பெறுங்கள். நிகழ் காலத்தில் நம்பிக்கையுடன் பயணியுங்கள். எதிர் காலத்தை எண்ணி தன்னம்பிக்கை கொள்ளுங்கள். முயற்சியை ஒரு போதும் கைவிடாதீர்கள். நீங்கள் உயர்ந்திட நினைப்பவர்கள் உங்கள் தகுதியை நன்கு தெரிந்தவர்கள். உங்களை உயரவிடாமல் தடுப்பவர்கள் உங்கள் பலவீனத்தை தெரிந்தவர்கள். உங்கள் பலவீனத்தை அறிந்து செயல் படுங்கள்.  வெற்றி நிச்சயம்..!

இது 'தான்' வாழ்க்கை

இது 'தான்' வாழ்க்கை : * தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர்,  * தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர்,  * தனது தொழிலில் ஒரு பத்து பேர்,             * தனது வீதியில் ஒரு பத்து பேர்,     * தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!! இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும்,. பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது. எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து  அதை விட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது. அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது. இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன.  இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக  வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழு...

சிறு ஜென் கதை

 சிறு ஜென் கதை : ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான். அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும். எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான். ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரை வேண்டி ஒரு ஜென் துறவியை நாடினான். அவனது கதை முழுதும் கேட்ட அவர்,"சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன"என்று கேட்டார்.  "30 நாட்கள்"என்றான் அவன்." இப்போது நீ என்னசெய்கிறாய்?"என்று பின்பு கேட்டார். "டீ ஆற்றுகிறேன்"என்றான் அவன். "அதையே தொடர்ந்து செய்"என்றார் அவர். ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்."எனக்கு பயம் அதிகரித்தவன்னம் இருக்கிறது. என்ன செய்ய?"என்றான்.  இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று"என்றார் ஜென் துறவி. தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றி...

வாழ்க்கையின் புரிதல்

வாழ்க்கையின் புரிதல் : கடவுளை நாம் நினைப்பதற்கு அவரால் அனுப்பப்பட்ட தூதர் தான் துன்பம் என்பது. மற்றவர்களின் மேன்மையைக் கண்டு மகிழ்ச்சியடைபவன் இறையருளைப் பெறுகிறான். கோபத்தால் சாதிக்க முடியாததை பொறுமையால் சாதிக்கலாம். ஏழைச் சுற்றத்தாரையும் சிறிய காயத்தையும் அலட்சியம் செய்யக் கூடாது. தர்மம் ஒருபோதும் ஏழையாக்குவதில்லை. களவு (திருடு) ஒருபொழுதும் செல்வந்தனாக்குவதில்லை. நண்பனை இரகசியமாக திருத்த வேண்டும். வெளிப்படையாகப் புகழ வேண்டும். கோபத்துடன் செயலில் ஈடுபடுவதும்,  புயலில் கப்பல் விடுவதும் ஒன்றேயாகும். இன்பமும் துன்பமும் நிலையற்றவை. பயமும் பேராசையுமே அதர்ம செயல்களுக்குக் காரணம்.  1. தோல்வி வந்த பொழுது விடாமுயற்சியுடன் இருத்தல். 2. துன்பம் வந்த பொழுது தைரியமாக இருத்தல். 3. பதவி வந்த பொழுது பணிவுடன் இருத்தல். 4. ஏழ்மை வந்த காலத்திலும் நேர்மையாக இருத்தல். 5. கோபம் வந்தபொழுதும் நிதானமாக இருத்தல். 6. செல்வம் வந்த பொழுதும் எளிமையாக வாழ்தல்.

நன்றி சொல்வோம்

நன்றி சொல்வோம் : "நன்றி" என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கிற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும், 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.  ''நன்றியையும் பாராட்டையும்'' மனதில் நினைத்தால் மட்டும் போதாது. உடனே அதை வெளிப்படுத்த வேண்டும். நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்துவிட வேண்டும். நன்றி, பாராட்டு உரியவருக்கு கொடுக்கும்போதுதான் அவர்கள் மீண்டும் அதை கூடுதல் மதிப்புடன் நமக்கு திருப்பிக் கொடுப்பார்கள். நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம், அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள். உங்களது நன்றியை தெரிவிக்காவிட்டால், அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்து போகவோ கூடும். "தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒருவர், அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில்...

தயக்கம்

தயக்கம் : வெற்றிக்கு இரண்டு எதிரிகள் உண்டு. அது தயக்கமும், முயற்சி இன்மையும்தான். துணிச்சலை தோழனாக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டி அடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.  தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்து ஓடி வரும். தயக்கத்தை விரட்டும் முதல் யுத்தி நேர்மறை எண்ணங்கள்தான். என்னால் முடியும் என்ற எண்ணம் தரும் நம்பிக்கை தயக்கத்தைவிரட்டி அடிக்கும். வெற்றியைத் தேடித் தரும். என்னால் முடியுமா? என்ற தயக்கம் தோல்வி எனும் படுகுழியில் தள்ளி விடும்.  யாரும் என் பேச்சை கேட்க மாட்டார்கள், எனக்கு யாரும் உதவ மாட்டார்கள், நமக்கு இது சரிப் பட்டு வராது என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை குறைத்தாலே அனைத்தும் நலமாக நடப்பதை உணரலாம்.  மனஉறுதியால் தேடியதை கண்டு அடைந்தவர்கள் உண்டு. மனஉறுதி யின்மையால் பின்னடைவே வரும். அடுத்ததாக தயக்கத்தை விட்டொழிக்கவும் முயற்சி அவசியம்.  எழுத்தாளராக வேண்டுமானால் எழுதி எழுதிப் பழக வேண்டும்,  பேச்சாளராக பேசிப் பேசி பழக வேண்டும். வெற்றியை நோக்கி செயல் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  எனவே நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள், எதைக் கண்டு ந...

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் : நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.  எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?  வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?  வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும்  அமைதி சாதாரணமானதல்ல.  அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். வெற்றிகள் கிடைக்கும் போது  இதுவும் கடந்து போகும்   என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  கர்வம் தலை தூக்காது.  தோல்விகள் தழுவும் ப...

கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்..?

கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்..? விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காப்பதற்காக சென்ற ராமர், மிதிலை சென்று சிவதனுசை முறித்து, சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் ராமபிரான். மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி பரிசுகளை அளித்து கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளை தரும் போது, தான் மட்டும் அற்ப காலணிகளையா தருவது? என நினைத்தவன், ராமரைப் பார்க்க போகாமலே திரும்ப யத்தனித்தான். அதனை கவனித்துவிட்ட ராமபிரான், அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்கு பிரிய மானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமபிரான் வனவாசம் புறப்பட்ட போது "தாயே, வனவாசம் செல்லும்போது எதை...

யார் மூடர்..?

யார் மூடர்..? எந்த காலத்துக்கும் பொருந்தும் படியாக விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு மஹா பாரதத்தில் விதுரர் மூலம் சொல்லப் பட்டுள்ளது. இது உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு கூறப் பட்டிருந்தாலும் எல்லோரும் கேட்டு பயனடையுமாறு வியாச மகரிஷியால் நமக்கு அருளப் பட்டது நமது பெரும் பாக்கியம். அடுத்து மூடன் என்றால் யார் என்று கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.. 1. கேள்விச் செல்வம் இல்லாதவன். அதாவது எதையுமே நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொள்பவன். நல்லோர்கள், படித்தோர்கள் சொல்வதை கேட்பவனே பண்டிதன் ஆவான். 2. வீண் ஜம்பம் அடிப்பவன். அதாவது கையில் ஒன்றுமே இல்லாமல் 18 மாடி வீடு கட்டுவேன் என்று ஜம்பம் அடிப்பவன் மூடன். 3. முயற்சி எதுவும் செய்யாமல் தானாக கிடைக்கும் என்று நினைப்பவன். எதையுமே செய்யாமல் நமது அறிவு, திறமையால் தானாகவே எல்லாம் கிடைக்கும் என்று நினைப்பவன் மூடன் ஆவான்.  4. தனது செயலை விட்டு விட்டு பிரர்த்தியார் செய்யும் தொழிலே நல்லது என்று நினைப்பவன். அதாவது தான் செய்யும் தொழிலை தாழ்வாக நினைத்து பிறர் செய்யும் தொழில் சிறந்தது என்று நினைப்பவன் மூடன். 5. நண்பருக்கு உறவினருக்கு துர...

ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம்

ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம் : ஸ்ரீராமர்பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.! அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள். மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க.. அகஸ்தியர்: ராமா எல்லாம் அறிந்தவன் நீ.. ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணனின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்.  சரி நானே கூறுகிறேன். சபையோர்களே.. ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான...

நான் வீழ்வேன் என நினைத்தாயோ..?

நான் வீழ்வேன் என நினைத்தாயோ..? பேரம் பேசி வாங்கி வந்த ஒரு கிலோ தக்காளியில் ஒன்றிரண்டு அழுகிப் போக.. வேண்டாம் என்று அதை புழக்கடையில் வீசி எறிய.. பத்து நாட்களுக்குப் பிறகு எதேச்சையாக அந்தப் பக்கம் போனபோது பச்சைபசேலென முளைத்த குறுத்து கண்களில் பட.. இது என்ன பெரிதாக தளிர்த்து விடப்போகிறது என்று நான் நகர்ந்துவிட.. அழுகிய தக்காளியில் இருந்து விழுந்த விதைகளும் மண்ணிலிருந்த ஈரத்தன்மை இவை இரண்டும் சங்கமிக்க.. இந்த நிகழ்விற்கு வானம் அவ்வப்போது (மழையாய்) நீர் இறைக்க.. விழுந்த நீரின் வேகம் தாளாமல் மேலெழுந்த மண்புழுக்கள் குறுக்கும் நெடுக்குமாக நகர்ந்து அதற்கு பிராணம் கொடுக்க.. கதிரவன் ஒளி சேர்க்க.. இரண்டு மாதம் கழித்து அந்த செடியில் பூத்துக் காய்த்து தக்காளி என் கண்களை உறுத்த.. அவை கணிவதற்குள்  பறித்துவந்து கூடையில் அடுக்கி விட்டேன்.. விழவேண்டும்.. விழுந்தாலும் வித்தாக எழ வேண்டும் என்பதை இயற்கை அனுதினமும் தானியங்கி நமக்கு ஒன்றை உணர்த்திக்கொண்டே  தான் இருக்கிறது.. "முயன்றால் முடியுமென்று". வேண்டாம் என்று நான் வீசிய அழுகிய தக்காளி என்னைப் பார்த்துச் சொன்னது.....

கோபத்தை குறைக்க என்ன வழி ?

கோபத்தை குறைக்க என்ன வழி ? முதலில் கோபம் எதனால் வருகிறது? கோபம் அடைவதனால் நன்மை என்ன? கெடுதல் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோபம் எதனால் வருகிறது? என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.  இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம். அது சரி.. நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம ...

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள் : முதல் மாமனிதர் : 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர். அப்போது ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”. சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை. அந்த தாய் கேட்டார் “ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”. அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை. அதனால் தான் அப்படி கூறினேன்”. இதை ...

இல்லாத பிரச்னை

இல்லாத பிரச்னை : ஒரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்.. ஒரு நாள் இரவு...  மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான். அவரும் எவ்வளவோ பாடுபட்டார். தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன. மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். எதற்கும் பலன் இல்லை. மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள், யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை. மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால், அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. உணவு சாப்பிடுவது  குறைந்து மன்னன் தன் பொலிவு இழந்தான். ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன், இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான் எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான். தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது ...

காந்தாரியின் கனவு

காந்தாரியின் கனவு : ”நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா!  நீ பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா? நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா? ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது. இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்! உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது!  இன்றிலிருந்து 36-ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!” என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி ...

மரப்பாச்சி பொம்மை மகிமை

மரப்பாச்சி பொம்மை மகிமை : அந்தக்காலத்தில் வீட்டில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் ஆகவில்லை திருமணதடை உள்ளது என்றால் இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்து பொம்மை கல்யாணம் என்றுசெய்து தெரிந்தவர்களை அழைத்து சாப்பாடு போடுவார்கள். அன்னதானத்தைவிட சிறந்த தானம் இல்லை. ஆகையால் பொம்மைக் கல்யாணம் மூலம் அன்னதானம் செய்வதன் பலன் உடனே திருமணம் கை கூடும். சரி திருமணம் ஆகிவிட்டது. பெண்னுக்கு சீர் கொடுக்கும்போது மரப்பாச்சி பொம்மைகள் வைப்பார்கள். காரணம், அந்தப்பெண் அந்த பொம்மைகளையே தன் தாய் தந்தையாக நினைத்து அவர்கள் கூட இருப்பதாக உணர்வாள். காரணம், அந்தக்காலத்தில் போட்டோக்கள் கிடையாது.  சரி குழந்தை பிறந்துவிட்டது. அந்த குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மரப்பாச்சி பொம்மையை சந்தணக்கல்லில் வைத்து தேய்த்து அதை தாய்ப்பாலில் குழைத்து விளக்கில் சூடு காட்டி அதை நெற்றியில் பத்து போட்டால் ஜலதோஷம் நீங்கி குழந்தை அயர்ந்து தூங்கும். பெரியவர்களுக்கு கட்டி வந்தால் கூட இது போல் தேய்த்து கட்டி மேல் தடவுவார்கள். சரி குழந்தை வளர்ந்து பல்லால் கடிக்கும்நிலை வரும் போது பல மருத்துவ குணங்கள் உள்ள பல்வேறு மர...

அன்பு விதை

அன்பு   விதை : பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள் அன்று உணவுக்கு ஏங்கின இன்று பாசத்திற்கு ஏங்குகின்றன! ஆதாயம் தேடும் அவசர உலகில் அன்பை அடகு வைத்து விடுவதால் துன்பங்களே நம்மை துரத்துகிறது! பிச்சைக்காரன் என்றாலும் உன்னை வணங்கினால் நீயும் அவனை வணங்கு… மனசிருந்தால் காசு போடு இல்லையென்றால் ஒரு புன்னகை சிந்து… பூரித்துப் போவான்! ஒவ்வொரு பூக்களும் வாசத்திற்கு உரியவை தான் ஒவ்வொரு மனிதனும் நேசத்திற்கு உரியவன் தான்! இறுகிக் கிடக்கும் இதயங்களை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்… ஒவ்வொரு ஆன்மாவின் சுவாசமும் அன்பால் அரவணைக்கப்பட வேண்டும்! விதை நெல்லாய் அன்பு பராமரிக்கப்பட்டு வீரியமிக்க விதைகளாய் இம்மண்ணில் துளிர்க்கட்டும்! மகத்தான அன்பு விதைகள் மனித மனங்களில் அறுவடையாகிற போது அங்கே மனிதநேயம் மறுமலர்ச்சியடையும்! அன்பு இல்லாதவர்கள் அரவணைக்கப்படுவதில்லை அன்பை இழந்தோர் ஆராதிக்கப்படுவதுமில்லை! சிற்பத்தைப் போல் செதுக்கப்படுவதல்ல அன்பு இதயத்தில் இயல்பாய் மலர்வது! விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி இதயங்களிலும் அன்பு விளக்கேற்றுவோம் எ...