வாழ்க்கையின் புரிதல்
வாழ்க்கையின் புரிதல் :
கடவுளை நாம் நினைப்பதற்கு அவரால் அனுப்பப்பட்ட தூதர் தான் துன்பம் என்பது. மற்றவர்களின் மேன்மையைக் கண்டு மகிழ்ச்சியடைபவன் இறையருளைப் பெறுகிறான். கோபத்தால் சாதிக்க முடியாததை பொறுமையால் சாதிக்கலாம்.
ஏழைச் சுற்றத்தாரையும் சிறிய காயத்தையும் அலட்சியம் செய்யக் கூடாது. தர்மம் ஒருபோதும் ஏழையாக்குவதில்லை. களவு (திருடு) ஒருபொழுதும் செல்வந்தனாக்குவதில்லை.
நண்பனை இரகசியமாக திருத்த வேண்டும். வெளிப்படையாகப் புகழ வேண்டும். கோபத்துடன் செயலில் ஈடுபடுவதும், புயலில் கப்பல் விடுவதும் ஒன்றேயாகும்.
இன்பமும் துன்பமும் நிலையற்றவை. பயமும் பேராசையுமே அதர்ம செயல்களுக்குக் காரணம்.
1. தோல்வி வந்த பொழுது விடாமுயற்சியுடன் இருத்தல்.
2. துன்பம் வந்த பொழுது தைரியமாக இருத்தல்.
3. பதவி வந்த பொழுது பணிவுடன் இருத்தல்.
4. ஏழ்மை வந்த காலத்திலும் நேர்மையாக இருத்தல்.
5. கோபம் வந்தபொழுதும் நிதானமாக இருத்தல்.
6. செல்வம் வந்த பொழுதும் எளிமையாக வாழ்தல்.
Comments