புதிய பார்வை

புதிய பார்வை :


சில காயங்கள் மருந்தால் சரியாகும். 

சில காயங்கள் மறந்தால்  சரியாகும்.


மனிதனுக்கு  பிரச்சனை. 

அதனால், கடவுளுக்கு  அர்ச்சனை.


வறுமை  வந்தால் வாடக்கூடாது. 

வசதி வந்தால் ஆடக்கூடாது.


கருப்பு  மனிதனின் இரத்தமும் சிவப்புதான். 

சிவப்பு  மனிதனின் நிழலும் கருப்புதான்.


வியர்வை துளிகள் உப்பாக  இருக்கலாம். 

ஆனால், அவை வாழ்க்கையை  இனிப்பாக  மாற்றும்.


வீரன்  சாவது இல்லை. 

கோழை  வாழ்வதே இல்லை.


உன்னை நீ செதுக்கி கொண்டே இரு.

வெற்றி  பெற்றால் சிலை.

தோல்வி அடைந்தால் சிற்பி.


மனிதனுக்கு ABCD தெரியும். ஆனா "Q" ல போக தெரியாது.

எறும்புகளுக்கு ABCD தெரியாது. ஆனா "Q" ல போக தெரியும்.


உண்மை எப்போதும்  சுருக்கமாக  பேசப்படுகிறது. 

பொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது.


பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம்  பொய்.

அவர்கள் பேச்சில், நாம் ஏமாந்து விடுகிறோம், என்பதே  உண்மை. 


குறைகளை  தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான். 

குறைகளை  பிறரிடம்  தேடுபவன் களங்கப்படுகிறான்.


கடனாக இருந்தாலும்சரி, அன்பாக  இருந்தாலும் சரி. திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.


உறவினர்களில் யார் முக்கியம் என்பதை  உயிரற்ற பணமே முடிவு செய்கிறது.

பணம் கொடுத்துப்பார். உறவுகள் உன்னை  போற்றும்.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார். மண்ணை வாரி தூற்றும்.


அறுந்து போன செருப்புக்கு கூட, வீட்டில் ஒரு இடம் உண்டு.

இறந்து போன மனித உடலுக்கு, வீட்டில் ஒரு இடமும் இல்லை.


இதுதான் உண்மை..

இதுவே வாழ்க்கை..!

Comments

Popular posts from this blog

இது 'தான்' வாழ்க்கை

நம்பிக்கை தான்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்